திருச்சி அருகே தனியார் விடுதியில் பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியரை திருச்சி போலீசார் கைது செய்ததை தொடர்ந்து விடிய விடிய போராட்டம்..
திருச்சி அருகே தேசிய தொழில்நுட்ப கழக விடுதி அறையில் தனியாக இருந்த மாணவியிடம் ஒப்பந்த ஊழியர் கதிரேசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததைத் தொடர்ந்து திருச்சி போலீஸார்கள் அவரை கைது செய்துள்ளனர், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை பற்றி விடுதி காப்பாளரிடம் தகவல் சொல்லிய பொழுது அவர் அதை பொருட்படுத்தாமல் பெண்கள் அணியும் உடையை பற்றியும் எங்களின் நடவடிக்கை பற்றியும் தவறுதலாக சொல்லி விமச்சனம் செய்துள்ளார், மேலும் ஒப்பந்த ஊழியர் கதிரேசனிடம் இதைப் பற்றி எதுவும் அவர் விசாரிக்க கூட இல்லை இதனால் விடுதி காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்ஐடி அகிலா வீட்டை முற்றுகையிட்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..!!