மேற்கு திசை காற்று அழுத்த மாறுபாட்டின் காரணமாக பல இடங்களில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு எடுத்து பல அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்படுகிறது இந்த நிலையில் ஆடி 18 முன்னிட்டு திருச்சி மாவட்டம் கொள்ளிட காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இந்த நிலையில், திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ள 1.10 மெகாவாட் உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம் உள்ளது, கோபுரத்தின் அடிப்பகுதி தண்ணீரால் அறிக்கப்பட்டுள்ளது இதனால் அந்த கோபுரம் சாய்ந்த நிலையில் இருப்பதால்.
திருச்சி கொள்ளிடம் காவிரி ஆற்றின் பாலத்தின் மீது போக்குவரத்துக்கு தற்சமயம் தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வருபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்கள்.