திருப்பதி ஏழுமலையில் அன்னபிரசாதம்..!! ஆர்கானிக் அரிசிக்கு பதில் சாதாரண அரிசியா..!!

உலகப் பிரசித்தி பெற்ற ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய இந்தியா முழுவதும் உள்ள பல பக்தர்களும் வருகின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்துள்ளது. அதில் ஒன்றாக பக்தர்கள் அனைத்து இடங்களிலும் அன்னதான கூடம் அமைக்கப்பட்டு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த அன்ன பிரசாதம் தயாரிப்பதற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட அரிசியை கொண்டு அன்னபிரசாதம் தயாரிப்பை நிறுத்திவிட்டு சாதாரணமான அரிசியை  கொண்டு அன்னபிரசாதம் தயார் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தற்பொழுது முடிவெடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி  வருகின்றது.

சமீபகாலமாகவே திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகி ஜே ஷ்யாமளா ராவ்  கோவிலின் புரோகிதர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் அன்ன பிரசாத வினியோகம் குறித்து முக்கிய ஆலோசனை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர அன்ன பிரசாதம் தயாரிப்பது குறித்தோ தயாரிப்பை அதிகரிப்பது குறித்தோ எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் ஸ்ரீவாரி கோவிலில் அன்னபிரசாதம் தயாரிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சில சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனர், அந்த தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை சமூக வலைதளங்களில் பரவும் இதுபோன்ற பொய்யான தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

Read Previous

உ.பி கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம்..!! ஜப்பான் பிரதமர் இரங்கல்..!!

Read Next

நீங்கள் கொடுத்தால் புரட்சி, பிரதமர் கொடுத்தால் அடக்கு முறையா..? அண்ணாமலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular