• September 11, 2024

திருமணம் செய்ய அப்பா அம்மா இல்லை – நடிகர் அப்புக்குட்டி வேதனை..!!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர் ஆகவும் காமெடி நடிகராகவும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமானவர்தான் நடிகர் அப்பு குட்டி. இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாக இருந்தார்.

முதல் படமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் அளவுக்கு அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துக் கொடுத்தார். அதை தொடர்ந்து. அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததன் மூலமாக பரவலாக அனைத்து தரப்பு ரசிகர்களாலும் அறியப்பட்டார்.

அழகர்சாமி குதிரை திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய இந்திய தேசிய திரைப்பட விருது கூட இவருக்கு கிடைத்திருந்தது. இவ்வளவு சிறப்பான நடிகராக இருந்த அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார்.

அதாவது, நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என கேட்டதற்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு அப்பா அம்மா ரெண்டு பேருமே இல்ல. சின்ன வயசுல ரெண்டு பேருமே இறந்துட்டாங்க. நானும் பொண்ணு தேடிக்கிட்டே தான் இருக்கேன். ஆனால் சினிமாக்காரன் அப்படிங்கறதால சொந்தக்காரங்களே பொண்ணு கொடுக்க பயப்படுறாங்க என்று வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார்.

Read Previous

Cucumber Chutney: வெள்ளரிக்காய் சட்னி செய்ய தெரியுமா?..

Read Next

பெண்களுக்கு முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular