தமிழ் ரசிகர்களின் மனதிற்கு எப்பொழுதும் நெருக்கமான நடிகைகள் ஒரு சிலரே. அதில் ஒருவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்து விடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர் எம்பிராய்டரி சேலை அணிந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த புடவையின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதாவது இந்த புடவையின் விலை ஒரு லட்சத்து 1 ஆயிரத்து 92 ரூபாயாம். முழுக்க முழுக்க கையால் இப்புடவை வரையப்பட்டுள்ளதால் இதற்கு இந்த விலையாம்.