இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதும் டி20 இறுதி போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் பேட்டிங் செய்தது. இந்நிலையில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 59 பந்துகளுக்கு 76 ரன்கள் எடுத்தார். அடுத்து அக்சர் படேல் 31 பந்துக்கு 47 ரன்கள் எடுத்தார். மேலும் சிவம் துபே 16 பந்துக்கு 27 ரன்கள் எடுத்தார். தென்னாபிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜா 2 விக்கெட்டுகள் எடுத்தார். இந்நிலையில்177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்க உள்ளது.