நாம் வசிக்கும் தெருக்களில் நிச்சயமாக தெரு நாய்கள் இருக்கும். இதனால் பலமுறை எந்த பிரச்சனைகளும் வரவில்லை என்றாலும் சில முறை ஏதேனும் சம்பவங்கள் நடந்து விடுகின்றன. நாய்களை அன்போடு நடத்த வேண்டியது அவசியமானாலும் நமது பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாய்கள் பெரும்பாலும் மனிதர்களின் பயத்தை உணரக்கூடியது. ஆகையால் ஒரு நாயை பார்க்கின்ற பொழுது அதன் கண்ணை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் உங்களின் பயம் அந்த நாயை கோபமடைய செய்யும். ஆகையால் உங்களின் பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பது மிகவும் நல்லது.
மேலும் குடை அல்லது குச்சி போன்ற பொருளை வைத்து உங்களுக்கும் நாய்க்கும் இடையே ஒரு பாதுகாப்பு தடையை ஏற்படுத்தி வைத்துக் கொள்ளலாம். நீங்கள் தப்பித்து ஓட முயற்சிக்கவே கூடாது. அதற்கு பதிலாக நாயை நீங்கள் விரட்ட வேண்டும்.
நீங்கள் தடை ஏற்படுத்திய பிறகும் நாய் உங்களை நெருங்கினால் உரக்க சத்தமிடுங்கள். ஆகையால் நாய் பின் வாங்கலாம். மேலும் உங்களிடம் ஏதேனும் உணவு இருந்தாள் நாயிடம் தூக்கி எறியுங்கள். இப்படி செய்தால் நாயின் கவனம் திரும்பிவிடும்.




