தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.
இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும். தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது .தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.




