நமது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டியதும் எந்த பிரச்சனைகளையும் வரவிடாமல் பார்த்துக் கொள்வதும் நமது கடமை ஆகும். அப்படி எலும்புகள் வலுவாக இருக்க கால்சியத்தை அதிகமாக சாப்பிட வேண்டும். அந்த வகையில் கால்சியம் அதிகமாக இருக்கும் உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
கீரை வகைகள் முட்டை தயிர் மற்றும் மீன் போன்ற உணவுகளில் கால்சியம் அதிகமாகவே இருக்கிறது. ஆகையால் இந்த உணவுகளை தினமும் நாம் எடுத்துக் கொண்டால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். கீரைகளில் பாலக்கீரை கொத்தமல்லி கீரை பசலைக்கீரை ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் அவரைக்காய் முட்டைகோஸ் முருங்கைக்காய் காலிபிளவர் அத்திப்பழம் மாதுளை பழம் முந்திரி பருப்பு பிஸ்தா பாதம் சோளம் ஆகிய உணவுகளை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி கால்சியம் அதிகமாக இருக்கும் உணவுகளை சாப்பிட்டு நமது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.




