இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், அரசியலில் ஈடுப்பட போவதாக இணையத்தளத்தில் செய்திகள் உலா வந்த நிலையில், இவர் சில நாட்களுக்கு முன்பு மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை சந்தித்ததோடு மட்டுமின்றி தான் வகித்து வந்த ரயில்வே வேலையும் ராஜினாமா செய்தார். இது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இவர் நேற்று மாலை தனது மாமா பஜ்ரங் புனியாவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று வெளியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் இவருக்கு மக்களிடையே கிடைத்த செல்வாக்கினால் இவர் எளிதில் வெல்ல வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு முன்னான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மல்யுத்தக்களத்தில் தவறவிட்டதை அரசியல் களத்தில் வென்று சாதிப்பாரா என்பதை பொறுத்து இருந்து காண்போம்.