தற்போதைய காலகட்டத்தில் புதிய தொழில்நுட்பம் இல்லாமல் எந்த துறையும் இயங்குவது இல்லை. அந்த வகையில், தகவல் தொழில் நுட்பத்தை முதன்மையாக கொண்டு இயங்கி வருவது IT துறையாகும். 2024 ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை கடந்த 8 மாதங்களில் மட்டும் 1,32,000 IT பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது layoffs.fyi என்ற அமைப்பு IT துறை சம்பந்தமாக நடத்திய ஆய்வில், ” கடந்த 2.5 ஆண்டுகளில் சராசரியாக 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட IT ஊழியர்கள் தங்களின் பணியை இழந்துள்ளதாக ” தெரிவித்துள்ளது.
இதுபோன்று நடப்பதற்கு முக்கிய காரணம், ” கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பொருளாதாரம் மந்த மடைந்தது மற்றும் அதிநவீன AI-யின் பயன்பாடு நடைமுறைக்கு வந்தது தான், என்று வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.