தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது,அதாவது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நாளில் இருந்தே தங்க விலை மிகவும் சரிவை காணப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
நாளுக்கு நாள் தங்க விலை குறைந்து கொண்டே விற்பனை செய்யப்பட்டு வருவதால், நகை கடைகளில் நகை பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
விலை நிலவரம் :
இதனை தொடர்ந்து இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 51,320 ரூபாய்க்கும் ,கிராமிற்கு 50 காசுகள் குறைந்து 6,415 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது ,இவ்விலைசரிவால் நடுத்தர மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக நகை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.