அமெரிக்கா, பென்சில்வேனியாவில் பிரபல ஹாலிவுட் நடிகை டேல் ஹாடன் (76) விஷ வாயுவை சுவாசித்ததால் மூச்சுத்திணறி பலியானார். அவரது வீட்டில் இருந்த எரிவாயு வெப்ப அமைப்பின் புகைப்போக்கியில் இருந்து விஷ வாயுவான கார்பன் மோனாக்சைடு கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த வாயுவை சுவாசித்ததால், டேல் ஹாடனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மயக்க நிலையில் கிடந்த டேல் ஹாடனை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.