
தமிழ் சினிமாவின் காதலின் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுனைனா.
தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் இவருக்கும் துபாய் யூ ட்யூபர் காலித் ஏ எல் அமெரி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இவர்கள் இருவரும் இந்த வருடத்தில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.