கென்யா நாட்டில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்த மனித உரிமைகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கென்யாவில்நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்கு உரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக கடந்த வாரம் மக்களிடையே போராட்டம் வெடித்தது. மேலும் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பலரும் நாடாளுமன்றத்தில் நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், இந்த சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கென்யா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய நீதி மசோதாவை திரும்ப பெறுவதாக அந்நாட்டின் அதிபர் வில்லியம் ருட்டோ அறிவித்துள்ளா.ர் இந்த நிலையில் அரசுக்கு எதிராக மக்கள் நாடாளுமன்றத்தில் நடத்திய போராட்டத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை மனித உரிமை ஆணையம் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 361 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறியுள்ளனர்.