கொல்கத்தாவில் சில தினங்களுக்கு முன் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் மருத்துவரை சீரழித்து கொலை செய்தவர்களுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று சக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டத்தை கலைக்கும் விதமாக போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியதால், பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
மருத்துவர்கள் வேலை நிறுத்தம்:
பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று, போராட்டத்தில் ஈடுபட்ட சக மருத்துவ மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதையொட்டி, இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பாக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் நாளை காலை 6 மணி தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அவசர சிகிச்சை மற்றும் அத்தியாவசிய பணிகள் இயங்குவதை தவிர்த்து, மற்ற எந்த ஒரு மருத்துவ பணிகளும் மேற்கொள்ளப்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.