நான்கு நாள் சுற்றுப்பயணம் ஒடிசாவுக்கு வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!!

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி மார்பு ஒடிசா விற்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை தொடர்ந்து ஒடிசாவில் உள்ள பிஜி பட்டினம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை ஆளுநர் ரகுபர் மற்றும் முதலமைச்சர் மோகன் சரண் மஜ்ஜி ஆகியோர் முறைப்படி வரவேற்று உள்ளனர்.

திரௌபதி கடந்த 1936 ஆம் ஆண்டு ஒடிசா தனி மாநிலம் உருவாக்கத்தில் முன்னோடியாக இருந்து பங்காற்றிய உத்கலமணி பண்டிட் கோபபந்து தாசின். 96வது நினைவு நாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்சியில் பங்கு கொண்டார். தொடர்ந்து ஒடிசாவின் மையூர்பஞ்ச் மாவட்டம் பகுதியை சார்ந்த திரௌபதி முர்மு  பூரி நகரில் நாளை நடைபெறக்கூடிய ரத யாத்திரையில் பங்கு கொள்ள உள்ளார். இதற்கு அடுத்த நாள் உதயகிரி குகை பகுதிக்கு சென்று பார்வையிட உள்ளார்.

அன்றைய தினம் பிபுதி கனூங்கு கலை மற்றும் கைவினை கல்லூரி மற்றும் உத்கல்  கலாச்சார பல்கலைக்கழகத்தின் மாணவர்களுடன் உரையாற்ற உள்ளார் வருகின்ற எட்டாம் தேதி புவனேஸ்வர் அருகே ஹரித மட கிராமத்தில் பிரம்ம குமாரிகளுக்கான தெய்வ ஓய்வு மையம் மற்றும் நீடித்த வாழ்க்கை முறைக்கான பிரச்சாரம் ஒன்றையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

9ஆம் தேதி புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பதிமூன்றாவது பட்டப்படிப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு அன்றைய தினம் டெல்லிக்கு புறப்பட உள்ளார்.

Read Previous

பரபரப்புக்கு மத்தியில் மணி போர் செல்லும் ராகுல் காந்தி..!! காரணம் இதுவா..!!

Read Next

தமிழகத்தில் மனிதர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை..!! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular