
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து அடுத்த மாதம் வெளியாக உள்ள திரைப்படம் GOAT. தற்போது வெங்கட் பிரபு இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக உள்ளார். அதேபோல், தற்போது மலேசியாவில் நடந்த GOAT படப் ப்ரமோஷனில் வெங்கட் பிரபு அவரது அடுத்த படம் பற்றிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, அடுத்ததாக நான் எடுக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக நடிக்க இருக்கிறார் என்று வெங்கட் பிரபு கூறி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.
ஆனால் இந்தப் படம் தொடங்க சில நாட்கள் ஆகும் என்றும் கூறியுள்ளார். ஏனென்றால், சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுபோக அவருக்கு நிறைய கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் அந்தப் படங்கள் முடிந்தவுடன் நாங்கள் இணைவோம் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.