நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசி இருந்தால் மக்கள் கேட்டு இருப்பார்கள் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதங்கம். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான், “நான் கருப்பாக, குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பது இல்லை. நான் தமிழன் என்பது தான், எனது அடையாளம். பலர் சாதியை இனம் என்று பேசி வருகின்றனர், அது தவறு. ஒரு மொழியை பேசும் குழுக்கள் தான் இனம். நான் போதிக்கும் போது உங்களுக்கு புரியாது, பாதிக்கும் போது உங்களுக்கு புரியும்” என்று கூறியுள்ளார்.