
நாய்க்கடித்த சிறுமிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி..!!
சென்னையில் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த காவலாளியின் மகளை 2 ராட்வீலர் நாய்கள் கடித்து குதறியது. இதையடுத்து, இழப்பீடு கோரி சிறுமியின் தாய் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், “தனி நபருக்கு சொந்தமான நாய் கடித்ததற்கு அரசை பொறுப்பாக்க முடியாது” எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.