
குழந்தை பிறந்தவுடன் அனைவரும் தவறாமல் பிறந்த சான்றிதழை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் பல முக்கிய விஷயங்களுக்காக பிறப்புச் சான்றிதழ் கேட்கப்படும். குறிப்பாக, ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், அரசு வேலைகள் மற்றும் திருமணப் பதிவு போன்றவற்றிற்கு பிறந்தச் சான்றிதழ் முக்கியமாக கேட்கப்படுகிறது. ஆனால், இப்பொழுதுவரை பிறப்பு சான்றிதழ் வாங்காமல் பல பேர் உள்ளனர். அப்படி வாங்காதவர்களுக்காக இப்பொழுது அரசு புதிய அறிவிப்பு அறிவித்துள்ளது.
நாம் ஆதார் கார்டை எப்படி பயன்படுத்துகிறோமோ அதேபோல், பிறப்புச் சான்றையும் முக்கிய ஆவணமாக பயன்படுத்தவேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது குழந்தை பிறந்து 15 ஆண்டுகளாக பிறந்த சான்றிதழில் பெயர் இணைக்கவில்லை என்றால் இப்போது பெயர் சேர்த்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை பெயர் சேர்த்துக்கொள்ளலாம் என்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவாளர் செல்வவிநாயகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.