இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானார் சந்திக்கும் பிரச்சினையில் ஒன்றுதான் இந்த மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் பிரச்சனை சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே இருக்கிறது. ஆனால் இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதுதான் தெரியவில்லை என்று பலரும் புலம்புகின்றனர். காலையில் ஆரம்பிக்கும்போதே இந்த மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அன்றைய நாள் புத்துணர்ச்சியாக இருக்காது. மேலும் இந்த மலச்சிக்கலை சரி செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
கண்டிப்பாக ஒவ்வொருவரும் குறைந்தபட்சமாக மூன்று லிட்டர் தண்ணீர் ஆவது தினமும் அருந்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். மற்றும் சியா விதைகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த சியா விதைகளை தண்ணீரில் கலக்கும் போது ஜெல்லாக மாறி மலம் மிருதுவாக வருவதற்கு இது மிகவும் உதவுகிறது. மேலும் நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை நாம் உட்கொண்டால் இந்த மலச்சிக்கலில் இருந்து நாம் சற்று தள்ளியே இருக்கலாம். பூசணி விதை சூரியகாந்தி விதை இவற்றை சாப்பிடுவதன் மூலம் குடல் இயக்கங்கள் எளிதாக்கி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட இது மிகவும் உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் மைதா சம்பந்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதிகமாக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமும் இந்த மலச்சிக்கல் பிரச்சனையை நாம் தவிர்க்கலாம்.




