• September 12, 2024

நெற்றியில் விபூதி வைத்தால் இத்தனை நன்மைகளா?.. பலருக்கும் தெரியாத விஷயம்..!!

நெற்றியில் விபூதி வைத்தால் இத்தனை நன்மைகளா?.. பலருக்கும் தெரியாத விஷயம்..!!

நெற்றியில் விபூதி வைப்பதினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

நெற்றியில் விபூதி:

இந்து மதத்தினை பின்பற்றும் நபர்களுக்கு விபூதி என்றால் அதற்கு தனி ஒரு மரியாதை உண்டு. ஆம் வழிபாட்டு தளங்களில் கொடுக்கப்படும் பிரசாதமாகவும் இருக்கின்றது.

மிகவும் புனிதமாக பார்க்கப்படும், விபூதியை நெற்றியில் வைப்பது பழங்கால பாரம்பரியமாக இருக்கின்றது. தீய சக்தியிடமிருந்து பாதுகாப்பதாக ஒரு ஐதீகமும் உள்ளது.

விபூதி பூசுவதால் பயன்கள்:

அக்குபிரஷர் படி, நம் புருவங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் நரம்புகள் அமைந்துள்ளது. இவற்றினை சிறிது மசாஜ் செய்தால் தலைவலியிலிருந்து விடுபடலாம். ஆதலால் விபூதியை நெற்றியில் வைப்பதால் தலைவலி பிரச்சினை தீரும் என்று கூறப்படுகின்றது.

விபூதியை நெற்றியில் வைப்பதால் எதிர்மறை ஆற்றல் உடலில் செல்வதை தடுக்கின்றது. புராண ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மூன்றாவது கண் ஆழ் மனம் என்று கூறப்படுகின்றது. நெற்றியின் மையப்பகுதியில் விபூதி வைப்பது இதற்கு சமமாகும்.

நாம் நெற்றியில் வைக்கும் விபூதி அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சினை நீக்குகின்றது.

உடம்பில் மந்தநிலை ஏற்பட்டால் அதனை போக்குவதாகவும் கூறப்படுகின்றது. இயற்கையாகவே நமது உடம்பில் உள்ள நரம்பு மண்டலத்தை தூண்டி மீண்டும அனைத்து ஆற்றல் சக்கரங்களையும் நேர்மறையாகச் செயல்பட செய்கின்றது.

இதனை நம் நெற்றி, கை, மார்பின் மேல் பகுதியில் தடவினால் சளி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். விபூதியால் உடல் முழுவதும் தேய்த்தால் காய்ச்சலில் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

Read Previous

வயநாடு நிலச்சரிவு: விக்னேஷ் சிவன் – நயன்தாரா கொடுத்த நிவாரண தொகை எவ்வளவு?..

Read Next

நிம்மதியற்ற இரவுகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன..!! நடிகர் விஷால் ட்வீட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular