பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் சென்னை பெரம்பூர் பகுதியைச் சார்ந்த ஆம்ஸ்ட்ராங். அவருக்கு அருவாள் வெட்டு விழுந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வருபவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னையில் உள்ள பெரம்பூரில் உள்ள தனது வீட்டில் ஆறு பேர் கொண்ட மர்மக்கும்பலால் அரிவாள் வெட்டு பெற்றுள்ளார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அவரை மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
அங்கு ஆம்ஸ்ட்ராங்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனை செய்தவர்களை தட்டி கேட்ட அதிமுக பிரமுகர் ஒருவர் சேலத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இதனை தொடர்ந்து தற்பொழுது இவருக்கும் அரிவாள் வெட்டு சம்பவம் நடைபெற்றது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “ஸ்டாலின் தலைமையால் தமிழக அரசால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குழந்து போய் உள்ளதாகவும், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக போகிறது..?” என்று கேள்வி எழுப்பி எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.