
பட்ஜெட் தாக்கல் காரணமாக NPS (நேஷனல் பென்ஷன் ஸ்கீம்) விதிகள் மாற்றப்பட்டுள்ளது. அதாவது NPS உறுப்பினர்களுக்கு, 60 வயதிற்கு பிறகு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை, தற்போது 40% உயர்த்தியுள்ளது. இந்த செய்தி பணியாளர்களுக்கு மகிழ்ச்சியானதாக இருந்தாலும் மாதம் பெரும் சம்பளத்தில் வழக்கத்தை விட கூடுதலாக தொகை பிடிக்கப்படுகிறது.
அதாவது NPS விதிப்படி மாதம் சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பிடிக்கப்படும், இது பணியாளரின் 60 வயதிற்கு பிறகு ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால், இப்போது புதிய விதிப்படி,14 சதவீதமாக பிடிக்கப்படும் என்று NPS அறிவித்துள்ளது. உதாரணமாக, ஒரு பணியாளரின் சம்பளம் 35000 ரூபாயாக இருந்தால், 10 சதவீதத்தின் படி 3500 ரூபாயாக பிடிக்கப்பட்டு 60 வயதிற்கு பிறகு 21,274 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் தற்போது 14 சதவீதத்தின் படி 4900 ரூபாயாக பிடிக்கப்பட்டு 60 வயதிற்கு பிறகு 29,783 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று NPS புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் பணியாளர்களிடையே கலவையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.