பத்திரிக்கையாளர்களின் தைரியமே ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண்..!! முதலமைச்சர் ட்வீட்..!!
தேசிய பத்திரிக்கையாளர் தினத்தையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், ஜனநாயகத்தின் 4வது தூணாக இருப்பவர்கள் பத்திரிக்கையாளர்கள். இந்த பத்திரிக்கையாளர் தினத்தில் உண்மையையும், பொறுப்புக்கூறலையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளை கௌரவிக்கிறோம்.
நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம் எனத் தெரிவித்துள்ளார்.