பன்னீரை வைத்து இப்படி ஒரு உணவு செய்து இருக்கிறீர்களா..!! அசத்தலான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

பன்னீரில் புரதச்சத்து மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இதனை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இதை வைத்து பலவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று பன்னீரை வைத்து பன்னீர் 65 எப்படி செய்வது என்று தெளிவாக இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 400 கிராம்,

இஞ்சி-பூண்டு விழுது – 2 கரண்டி,

மிளகாய் தூள் – 1 கரண்டி,

கரம் மசாலா – 1 கரண்டி,

மிளகுத்தூள் – 1 கரண்டி,

எலுமிச்சை சாறு – 2 கரண்டி,

தயிர் – 2 கரண்டி,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பன்னீரை துண்டுகளாக வெட்டி எடுத்து அதனோடு ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ளதை சேர்த்து நன்றாக பிசைந்து எடுக்கவும். பிறகு இன்னொரு பாத்திரத்தை எடுத்து எப்போதும் சிக்கன் தொண்டுகளை பொறிக்க நாம் தயார் செய்வது போல இஞ்சி பூண்டு விழுது மசாலா பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து மசாலாவை தயார் செய்து கொள்ளவும்.

இந்த கலவை தயாரானதும் சிறிது நேரம் ஊற வைத்து பன்னீர் துண்டுகளை கலந்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். பத்து நிமிடம் கடந்த பின்னர் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு இந்த பன்னீர் துண்டுகளை அதில் அடுத்தடுத்து போட்டு பொருத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான பன்னீர் 65 தயார்.

Read Previous

ஊறவைத்த உலர் திராட்சையில் இருக்கும் நன்மைகள்..!! மக்களே கட்டாயம் படிங்க..!!

Read Next

ஆம்லெட்டை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்..!! நொடியில் காலியாகும் செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular