பரபரப்பு..!! 64 அடி தேர் கவிழ்ந்து விபத்து..!! பக்தர்கள் காயம்..!!
விழுப்புரம் மாவட்டம் கடையம் கிராமத்தில் இருக்கும் சூலப்பிடாரியம்மன் ஆலயத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவானது நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவானது இன்று (ஆகஸ்ட் 14) நடைபெற்றது. திருவிழாவின் ஒரு பகுதியாக 64 அடி உயர தூக்கு தேரை ஊர் மக்கள் தூக்கி சென்றனர். அப்போது திடீரென தேர் கவிழ்ந்தது. இதில் பக்தர்கள் சிலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தேரை நிமிர்த்தி மீண்டும் தேரோட்டம் நடந்து வருகிறது.