திருப்பூர் அருகே தாராபுரத்தை சேர்ந்தவர் தான் விக்னேஷ் .இவருக்கு பல மாதங்களாக திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மேட்ரிமோனி செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சந்தியா (30 )என்பவர் விக்னேஷ் என்பவருக்கு அறிமுகமாகி இருக்கிறார்.
இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. அப்போது தனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக தமிழ்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சந்தியா தெரிவித்து இருக்கிறார். தமிழ்ச்செல்வியையும் விக்னேஷுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இருவருக்கும் இடையே நன்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனவும், வீட்டில் அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார்கள் என்றும் கூறி தனது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விக்னேஷை சந்தியா வற்புறுத்தியுள்ளார்.
இதனை அடுத்து தமிழ்ச்செல்வி தலைமையில் இருக்கும் ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தை விக்னேஷின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர். விக்னேஷின் பெற்றவர்கள் தங்கள் மருமகள் என கருதி 12 பவுன் நகையும் சந்தியாவுக்கு வாங்கி கொடுத்திருக்கின்றனர்.
இதில் உஷாரான விக்னேஷ் சந்தியாவிடம் பிரச்சனையைப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என சமாதானமாக பேசி ஒரு வழியாக தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார். காவல் நிலையத்தில் போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே சந்தியா அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து போலீசார் சந்தியாவின் பின்னணி குறித்து விசாரிக்க ஆரம்பித்து உள்ளனர்.இதில் தான் பல அதிர்ச்சிகரமான விஷயம் தெரியவந்துள்ளது. சந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையை சேர்ந்த ஒருவரிடம் திருமணம் முடிந்ததும், அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருப்பதாக தெரியவந்துள்ளது.