
மனிதனாக பிறந்த எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு முறையில் ஏதோ ஒரு நோய்க்கு நமது உடல் ஆட்பட்டு கொண்டிருக்கிறது அவற்றை சரி செய்ய இந்த வழிமுறைகளை கையாளலாம்..
முருங்கை விதையை நன்றாக காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் இதயத்தை பலப்படுத்தும் ரத்த சோகை நீங்கும் எலும்புகளும் பலத்தை கொடுக்கும் முருங்கை விதையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை வியாதி குணமாகும் செல் சிதைவை தடுக்கிறது புதிய செல்கள் உருவாகுவதை பெருக்குகிறது புற்றுநோய் வராமல் தடுத்து நிறுத்துகிறது, வரட்டு இருமலுக்கு சிறந்த தீர்வாக திராட்சை உதவுகிறது, முதுகுத்தண்டு வலிக்கு பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லது, ரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை சாப்பிடலாம், மூளைக்கு வலுவூட்ட வல்லாரை மிகவும் நல்லது, காது மந்தம் போக்க தூதுவளை சாப்பிட வேண்டும், மூத்திர கடுப்பு மாற்ற பசலைக்கீரை சாப்பிட்டு வரவும், பித்த மயக்கம் தீர புளியோதரை சாப்பிடலாம், அதே போல் உடல் சூடு அகல முருங்கைக்கீரை சாப்பிடலாம், சர்க்கரை நோய்க்கு துளசி இலை நல்லது, ரத்தத்தை சுத்தகரிக்க வெள்ளைப்பூண்டு, கண்பார்வை அதிகரிக்க கேரட் புதினா, ஏலக்காய், கடுமையான ஜலதோஷத்திற்கு தேனும் எலுமிச்சையும், வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம், கொழுப்பு சத்தை மிளகு குறைக்கிறது, இளைத்த உடல் பெருகுவதற்கு மிளகு உணவில் சேர்த்துக் கொள்ளலாம், பொடுகை போக்க தயிரில் குளித்து விடலாம், மூல நோய்க்கு கருணைக்கிழங்கு சிறந்தது, இதய பலவீனம் போக்க மாதுளை நல்லது, வெள்ளை வெட்டை தீர அன்னாச்சி சாப்பிடலாம், காது வலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடலாம், பீனிசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெந்தயம் சேர்த்து உண்ணலாம், பொன்னாங்கண்ணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்…!!