பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும் கொள்ளு காரப்பொங்கல்..!! சத்தான மற்றும் சுவையான செய்முறை இதோ..!!

நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமாக காணப்படுகிறது. அப்படி புரதச்சத்தை அதிகப்படுத்தி தர கொள்ளு மிகவும் உதவுகிறது. இதனை தினமும் உண்டு வந்தால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். இதை வைத்து பொங்கல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 100 கிராம்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கொள்ளு – 50 கிராம்
பெருங்காயத்தூள் – தேவைக்கேற்ப
உப்பு – தேவையான அளவு
மிளகு, சீரகம் – அரை தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
இஞ்சி – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2

செய்முறை :

கொள்ளுவை எடுத்த 10 மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். இஞ்சியை தோல் நீக்கி பச்சை மிளகாயை வெட்டி எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக கொள்ளு அரிசி இவை இரண்டையும் நன்றாக கழுவி வேக வைக்க வேண்டும். வெந்த பிறகு கொள்ளு மற்றும் அரிசியை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.

கடைசியாக ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடான பிறகு மிளகு இஞ்சி சீரகம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு வதக்கி எடுத்து வைத்திருக்கும் கொள்ளு கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான கொள்ளு காரப்பொங்கல் தயார்.

Read Previous

உங்கள் குழந்தைகளுக்கு காய்கறியை கொடுக்க சரியான வழி இதோ..!! வெஜிடபிள் சப்பாத்தி செய்முறை..!!

Read Next

இந்த தவறை இனி யாரும் செய்யாதீர்கள்..!! சர்க்கரைனால் ஏற்படும் பாதிப்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular