நாங்குநேரி மாணவர் சின்னதுரை சில நாட்களுக்கு முன்பு சக மாணவர்களால் அறிவாளால் வெட்டப்பட்டிருந்தார். சாதிய இந்த பிரச்சனை ஓய்ந்தருந்த நிலையில், மீண்டும் நெல்லையில் சாதிய மோதல் தலை தூக்கி உள்ளது. ஊர் பெயரைச் சொல்லி இரண்டு மாணவர்கள் மீது சக மாணவர்களே தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களை மிருகமாய் மாற்றும் சாதி என்னும் பேய் தற்போது கோயிலாக விளங்கும் பள்ளி வரை நுழைந்து இருப்பது பலரையும் வேதனைக்குள்ளாக்கி உள்ளது. சாதி ரீதியிலான மோதல்களை துண்டுபவர்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளது.