மாதம் பிறந்த முதல் வாரத்தில் பள்ளிகளுக்கான விடுமுறை நாட்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு தொடர் விடுமுறைகள் வருவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. அதன்படி ஆகஸ்ட் 15 முதல் 18 வரையும், ஆகஸ்ட் 25 முதல் 26 ஆம் தேதி வரையும் தொடர் விடுமுறைகள் வர உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த ஆகஸ்ட் மாதத்தில் 2 பொது விடுமுறைகள் உள்ளன. அவை தொடர் விடுமுறை அல்ல, ஆகஸ்ட் 15 ( வியாழக்கிழமை) சுதந்திர தினம், ஆகஸ்ட் 26 ( திங்கட்கிழமை) கிருஷ்ணா ஜெயந்தி என தெரிய வந்துள்ளது . எதுவாக இருந்தாலும் 2 நாட்கள் பொது விடுமுறை கிடைப்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.