உலகம் எங்கும் இன்று குளிர்பானம் என்று சொல்ல கூடிய பல ரசாயனங்கள் கலந்த இனிப்பு சுவை தரக்கூடிய குளிர்பானங்களை பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றது, அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த குளிர்பானங்கள் உடலுக்கு கேடுதான் என்று நமக்கு தெரிந்தும் நமது குழந்தைகளுக்கு வாங்கி தான் தருகிறோம் அதனால் எவ்வளவு ஆபத்து என்று உங்களுக்கு தெரியுமா.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் 10 ரூபாயில் விற்கும் குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார், சிறிது நேரத்திலேயே அந்த ஆறு வயது சிறுமியின் வாயில் நுரைத்தள்ளியது சற்று நேரத்திலேயே அந்த குழந்தை இறந்துள்ளார், இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள dailee குளிர்பான ஆலையில் சோதனை நடத்தியது அச்சோதனையில் அங்கு பெறப்பட்ட மாதிரி குளிர் பானங்களை ஆய்விற்கு அனுப்பப்பட்டது மேலும் காலாவதியான குளிர்பானங்களை விற்றால் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது..!!