பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை..!! மறந்தும் இதை செய்யாதீர்கள்..!!

மாதம்தோறும் அமாவாசை வந்தாலும் தை புரட்டாசி ஆடி மாதங்களில் வரும் அமாவாசையன்று எமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தால் அவர்கள் மன குளிர்ந்து நமக்கு ஆசி அளிப்பார்கள் என்பது ஐதீகம்.

முன்னோர்கள் வழிபாடு:

ஆடி அமாவாசை நாளில், அதிகாலையில் எழுந்திருத்தல், சமயச் சடங்குகள், கோவில்களுக்குச் செல்வது, முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆடி அமாவாசை நாளில் கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை.

அமாவாசை என்பது முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உரிய சிறப்பு நாளாகும்.

இந்நாளில், முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து, அவர்களுக்கு பிடித்தமான உணவு சமைத்து, அதை முன்னோர்களுக்கு கொடுப்பதாக நினைத்து காக்கைகளுக்கு கொடுத்த பிறகு வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவது தான் வழக்கம்.

தானம் கொடுத்தல்:

ஆடி அமாவாசை நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு வயதானவர்களுக்கு, ஏழைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு போன்றோருக்கு அன்னதானம் வழங்குங்கள். குறைந்தபட்சம் 11 பேருக்காவது நீங்கள் உங்கள் கைகளால் அன்னதானம் வழங்கினால், முன்னோர்களின் சாபம் நீங்கும்.

அதுமட்டுமின்றி, உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தோல்விகள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

வருடம் முழுவதும் வரும் அமாவாசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுக்க தவறினாலும், அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் போதும் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தாலும் அதனால் ஏற்படும் பித்ருதோஷமானது ஆடி அமாவாசையில் தானங்களை கொடுப்பதால் அவை நீங்கி விடும் .

நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தாலும், வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு விளக்கேற்றாமல் இருக்கக் கூடாது.

பூஜை அறையில் விளக்கேற்றுவதுடன், தனியாக முன்னோர்கள் படத்திற்கு முன் ஒரு அகல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

செய்யக்கூடாதவை…..

முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது. அப்படி உணவளிப்பதாக இருந்தால் பகல் 12 மணிக்கு பிறகு தான் உணவளிக்க வேண்டும்.

முன்னோர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையாக போடக் கூடாது. இரண்டு இலைகள் போட்டு தான் படையல் இட வேண்டும்.

பித்ருக்கள் போட்டோக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக வைக்கக் கூடாது. ஒரே இடத்தில் வைத்தே படையல் போட வேண்டும்.

காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையில் இட வேண்டும். அதற்கு முன்பாக படையல் இட கூடாது.

ஆடி அமாவாசை அன்று நகம் வெட்டக் கூடாது.  பெண்கள் தலையை விரித்து போட்டபடி இருக்கக் கூடாது.

நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது.   பெண்கள் குளித்து விட்டு தான் சமையல் செய்ய வேண்டும். குளிக்காமல் சமையல் அறைக்குள் செல்லக் கூடாது.

Read Previous

நிம்மதியற்ற இரவுகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன..!! நடிகர் விஷால் ட்வீட்..!!

Read Next

மலை மாவட்டங்களை கண்காணிக்க உத்தரவு – வயநாடு சம்பவம் எதிரொலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular