நம் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திரா திவேதி அவர்கள் பதவியேற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவத்தின் தளபதியாக மனோஜ் பாண்டாவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் 29 ஆவது ராணுவ தளபதியான ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த மே 22 ஆம் ஆண்டு பதவியேற்ற மனோஜ் பாண்டி பதவி காலம் இன்று முடிவடைந்த நிலையில் தேசிய போர் நடைபெற்ற இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். 26 மாத பதவி காலத்திற்கு பின் இன்று அவர் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியாவின் புதிய இராணுவ தளபதியாக லெப்டினட் ஜெனரல் உபேந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றியவர் அடுத்து ராணுவ தளபதியாக நியமித்து கடந்த ஜூன் 12ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ராணுவ துணை தளபதியாக இருக்கும் லெப்டினட் ஜெனரல் உபேந்திரன் திவேதி நாட்டின் முப்பதாவது ராணுவ தலைமை தளபதி மற்றும் பல்வேறு ராணுவ பொறுப்புகளில் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.