புதுச்சேரி: MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு..!! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு..!!
புதுச்சேரியில் குரூப் B பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் MBC பிரிவினருக்கு மாண்டும் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர், “OBC பிரிவினருக்கான 33% இட ஒதுக்கீட்டில், MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டு விரைவில் புதிய அரசாணை வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.