புரட்டாசி மாதம் என்றாலே அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்பது நம் பெரியோர்கள் மற்றும் பாரம்பரியமாக நம் பின்பற்றி வரும் ஒரு வழக்கமாகும். இந்நிலையில் புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
நாம் பாரம்பரிய நம்பிக்கைகளில் முக்கியமாக இடம் பிடிக்கும் மாதங்களில் ஒன்றுதான் புரட்டாசி மாதம் இந்த மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். இதனால் இந்த மாதத்தில் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வருடம் முழுவதும் சாப்பிடும் அசைவ உணவை ஏன் புரட்டாசி மாதத்தில் மட்டும் தவிர்க்க வேண்டும் என்று பலருக்கும் கேள்விகள் இருக்கும் அதற்கான பதில்களை தற்போது பார்க்கலாம்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும் பெருமாள் அதிகமாக சுவைத்து உண்ணும் ஒரு உணவு சைவ உணவாகும். அதனால் தான் பெருமாள் அசைவத்தை அதிகம் விரும்பவில்லை என்பதால் மக்களும் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை மேற்கொண்டு விரதம் இருக்கின்றனர். மேலும், இந்த புரட்டாசி மாதத்தில் வெயில், மழை இரண்டும் இருக்கும். இதனால் வெயில் காலத்தில் வெப்பம் அடைந்த பூமி மழை பெய்யும் போது குளிர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது இந்த காலகட்டத்தில் அசைவ உணவுகளை உட்கொண்டால் உடலில் வெப்பத்தை அதிகரித்து பல்வேறு உடல் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதாலும் நம் முன்னோர்கள் புரட்டாசி மாதத்தில் சைவத்தை கடைப்பிடிக்கின்றனர்.




