புரதச்சத்து அதிகமாக இருக்கும் கொள்ளு வடை..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

நமது உடலுக்கு ஆரோக்கியமான உணவை தருவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் உடற்பயிற்சி செய்பவர்கள் புரதச்சத்தை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். அப்படி இன்று புரதச்சத்து அதிகமாக இருக்கும் கொள்ளு வடையை எப்படி செய்வது என்று தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள் :

முளைகட்டிய கொள்ளு – ஒரு கப்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – இரண்டு
வெங்காயம் – நான்கு
கொத்தமல்லி – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

பச்சை மிளகாய் வெங்காயம் கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். கொள்ளு பருப்பை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து அதை 8 மணி நேரமாவது ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி கொள்ளு பருப்பை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

நறுக்கிய வெங்காயம் சமையல் சோடா பெருங்காயத்தூள் பச்சை மிளகாய் உப்பு ஆகியவற்றை சேர்த்து இந்த கலவையை வடை மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு மாவை வடைகளாக தட்டி வேகவிட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான கொள்ளு வடை தயார்.

Read Previous

காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் இத்தனை பிரச்சனைகளா..!! மக்களை கட்டாயம் படிங்க..!!

Read Next

உங்களுக்கு ரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறதா..!! அதனை முழுமையாக சரி செய்ய இயற்கை முறைகள் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular