
பெண்களின் சந்தேகத்திற்கு காரணம்..
அதிக பொசசிவ்நஸ்…
கணவன் தனக்கு மட்டுமே சொந்தம்
தன்னிடம் மட்டுமே அதிகம் பேசனும்
தன்னிடம் மட்டுமே அன்பு காட்டனும்
தன்னிடம் மட்டுமே அக்கறை காட்டனும்
தனக்கு மட்டுமே பிடிச்சதை வாங்கி தரனும்
தன்னை மட்டுமே வெளியே அழைத்து செல்லனும்,
தன்னை மட்டுமே சிரிக்க வைக்கனும்,
தன்னிடம் மட்டுமே ரொமான்ஸ் செய்யனும்,
என்று…
அதிக பொசசிவ்நஸ் உண்டு..
அதுக்கு ஏதாவது தடை இடைஞ்சல் வந்தால்..
அது மனைவி/ காதலி பொறாமையாகவும்,
கோபமாகவும்
உதாசீனபடுத்துதலாகவும்
அதிக தொந்திரவாகவும்
வெளிப்படுத்தலாம்…
அதன் பரிணாமமே… சந்தேகம்…
அலைபேசி அழைப்பு விசாரணை துப்பு துலக்கல்…
மனைவி வீட்டிலிருந்து…..
அலைபேசியில் அழைத்து “எப்போ வருவீங்க” என்று கேட்டால் ஆண்களுக்கு அவ்வளவு கோபம் வருகிறது.
உண்மையில் உங்கள் மனைவி உங்களை சீக்கிரமாக வீட்டிற்கு வர விரும்புவதற்கான 10 காரணங்கள் என்ன தெரியுமா?
1. இரவு மிகவும் நெருக்கமான நேரம். உங்கள் இரவை யாருக்குக் கொடுக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள இருக்கலாம்.
2. உங்கள் பிள்ளைகள் உறங்கும் முன் உங்களுடன் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று அவள் விரும்பலாம்.
3. நீங்கள்தான் வீட்டின் ராஜா. உங்கள் இருப்பு, வீட்டின் தலைவனாகத் தேவைப்படும்போது ஏன் வராமல் இருக்க வேண்டும் என்று நினைக்கலாம்?
4. அவள் உன்னிடம் உரையாட விரும்புகிறாள்,
தினசரி வேளைகளில் அவள் சோர்வடைந்து தூங்குவதற்கு முன்பு ஒருவருக்கொருவர் அன்றைய நாள் எப்படி இருந்தது என்பதை அறிய விரும்புகிறாள்.
5. உன்னை மீண்டும் மீண்டும் காதலிக்க, இரவில் அவள் அடிக்கடி தொடுதல், சீண்டுதல், விளையாட்டாக கோபப்படுத்தி பார்த்தால் என உங்கள் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறாள்.
6. அடுத்த நாள் அனைத்தும் சிறப்பாக நடக்க. உன்னுடன் போதுமான அளவு பேசாமல், அவள் தூங்குவது சரியில்லை என்று நினைக்கலாம்.
7. அவள் நினைப்பது, இந்த வீடு இரவில் வெகுநேரம் தூங்குவதற்கு மட்டும் செல்லும் லாட்ஜ் அல்ல. சீக்கிரம் வீட்டிற்கு வாருங்கள், அதனால் நீங்கள் உங்கள் குடும்பத்தையும் தன்னையும் மகிழ்விக்கலாம்.
8. நீங்கள் சீக்கிரம் வருவது, அவளுக்கான அங்கீகாரமாக நினைக்கிறாள்.
9. நீங்கள் உங்கள் குடும்பத்துடன், குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடவேண்டும் என்று நினைக்கிறாள்.
10. நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதை அறிய. நீங்கள் வீட்டில் இருக்கும் போது, அவள் தொடைகள் மேல் அல்லது மார்பில் படுத்துக்கொண்டு, அவளை அரவணைத்துக்கொண்டிருக்கும்போது அவள் பாதுகாப்பாக உணருவாள். அதை இன்றாவது நீங்கள் தருவீர்கள் என்று எதிர்பார்க்கலாம்.
கணவனின் மேல் உள்ள அன்பினால் மனைவிகள் கொஞ்சம் எல்லை மீறும்போது அது அவர்களுக்குள் கசப்பாகிறது.
ஆனால் காதலும், அக்கறையுமே அனைத்திற்கும் அடிப்படை என்பதை ஆண்கள் புரிந்துகொண்டால் வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியாக இருக்கும்.
வாழ்க்கை மனைவியுடன் சந்தோஷமாக வாழ்வதற்கே.
அதை முழுமையாக வாழுங்களேன்..