பெண்களின் தோல் சுருக்கம், பருக்களை போக்கும் மாதுளம் பழ மாஸ்க்..!!

இக் காலத்தில் பலரும் மாதுளம் பழத்தை சாப்பிடுவதில் அதிக நாட்டத்தை காட்டி வருகின்றனர். இதில் உடலிற்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் கனியுப்புகளும் உள்ளன. இதனை உண்பதால் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சமிபாட்டு பிரச்சனையை தீர்க்கும்.

அத்துடன் முக்கியமாக சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்கிறது. இதனை சருமத்திற்கு வெளியே பயன்படுத்துவதால் கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை மிருதுவாக்கும்.

அதுமட்டுமின்றி, தோல் சுருக்கம் சூரியக் கதிர்களின் பாதிப்பு போன்றவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

மாதுளம் பழ முகப்பூச்சுகளின் பயன்கள்
1. சரும பொலிவிற்குஉதவும்.
இதிலுள்ள விற்றமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியையும் புதுப் பொலிவையும் பெற்றுத் தரும்.

தேவையானவை:
• 1 மாதுளம்பழம்.
• 1 கப் நீர்.

பயன்படுத்தும் முறை:
மாதுளம் பழத்தை வெட்டி எடுத்து, ந்தில் நீர் சேர்த்து பசையாக அரைத்துக் கொள்ளவும். அதனை முகம், கழுத்துகளில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

2. பிரகாசமானசருமத்தைபெற உதவும்.
சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், நிறத் திட்டுக்கள் என்பவற்றை நீக்கி பிரகாசமான சருமத்தை பெறுவதற்கு இவ் முகப்பூச்சினை வாரத்தில் ஒரு தடவை என பயன்படுத்தல் சிறந்தது.

தேவையானவை:
• 1 மாதுளம் பழம்.
• 3 மேசைக்கரண்டி தயிர்.

பயன்படுத்தும் முறை:
பழுத்த மாதுளம்பழத்தை எடுத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதனை பிளண்டரில் அரைத்து அதில் தயிர் சேர்த்து பசையாக எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

3. முகப்பருக்களைநீக்குதல்
இதற்காக மாதுளம் பழமுகப் பூச்சினை வாரத்தில் இரண்டு தடவை பயன்படுத்துவது சிறந்த பலனை தரும்.

தேவையானவை:
• 1 மாதுளம் பழம்.
• 1 தேக்கரண்டி தேன்.
• 1 தேக்க்ரண்டி எலுமிச்சை சாறு.

பயன்படுத்தும் முறை:
மாதுளம்பழத்தை அரைத்து பசையாக எடுத்துக் கொள்ளவும். அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

4. உலர்ந்தசருமத்திற்குதீர்வுகிடைக்கும்
மாதுளம் பழம் சருமத்தின் ஈரப்பதனை அதிகரிக்க செய்து அதன் ஆரோக்கியத்தை பேணுகின்றது.

தேவையானவை:
• 1 மாதுளம்பழம்.
• 1 கரண்டி ஒட்ட்ஸ் பவுடர்.
• 1 கரண்டி தேன்.
• 1 முட்டை மஞ்சள் கரு.

பயன்படுத்தும் முறை:
மாதுளம் பழத்தை பிளண்டரில் அரைத்து பசையாக எடுத்துக் கொள்ளவும். அதில் அணைத்து சேர்மானங்களையும் சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். இதனை வாரத்திற்கு இரு தடவைகள் செய்வதனால் விரைவான தீர்வைப் பெற முடியும்.

Read Previous

டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை தென்னாப்பிரிக்கா அணி மாபெரும் சாதனை..!! முழு விவரம் உள்ளே..!!

Read Next

பாலியல் தொல்லை: பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular