பெண்கள் கர்ப்ப காலத்தில் அவர்களது மருத்துவ செலவுகளை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது திட்டம் குறித்த விவரங்களை பதிவில் காண்போம்.
உதவித்தொகை:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வரிசையில் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா என்னும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது இத்திட்டத்தின் வாயிலாக கருவுற்ற தாய்மார்களுக்கு ரூ. 6000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு இன்றி நல்ல உணவுகளை உட்கொள்ளும் நோக்கிலும் மருத்துவ செலவுகளை சமாளிக்கவும் இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
19 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற https://wcd.nic.in/schemes/pradhan-mantri-matru-vandana-yojana என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் தகுதியுள்ள பெண்களுக்கு உதவி தொகை ஆனது அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இது போன்ற அருமையான திட்டங்கள் குறித்து விவரங்கள் தொடர்ந்து பதிவிடப்படும்.