
பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்?
அப்படி என்னதான் இன்பம் பெண்ணிடத்தில்?
என்ன இல்லை அவளிடம்? கேட்குறேன்.
இறைவன் மிச்சமே வைக்காமல்
படைத்த அழகிய படைப்பு.
அவளுக்கென்று தனி அழகு இருக்கு
அவளுக்கென்று தனி தாய்மை இருக்கு
அவளுக்கென்று தனி நேசம் இருக்கு…,,
அவளுக்கென்று தனி பாசம் இருக்கு.
அவளுக்கென்று தனி கற்பனை இருக்கு.
அவளுக்கென்று தனி மனம் இருக்கு.
அவளுக்கென்று தனி குழந்தைதனம் இருக்கு
அவளுக்கென்று தனி ஆண்மை இருக்கு
அவளுக்கென்று தனி பெண்மை இருக்கு
அவளுக்கென்று தனி நளினம் இருக்கு
அவளுக்கென்று தனி வெட்கம் இருக்கு
அவளுக்கென்று தனி நாணம் இருக்கு
அவளுக்கென்று தனி திமிர் இருக்கு
அவளுக்கென்று தனி இதயம் இருக்கு
அவளுக்கென்று தனி உள்ளம் இருக்கு
அவளுக்கென்று தனி காதல் இருக்கு.
அவளுக்கென்று தனி உலகம் இருக்கு.
அவ்வளவு இருக்குங்க.
அவளிடம்…,
அவளிடம் மட்டும்….,
அவள் ஒரு நூலகம்னு சொன்னா ரொம்ப சின்னதாகிடும்…
கடல்னு சொன்னா கூட…,
கடலில் கூட கரையேறி விடலாம்.
ஆனால் ஒரு முறை,
அவள் அன்பிற்குள்,
அவள் அரவணைப்பிற்குள்,
அவளின் கரிசனைக்குள் சிக்கிக்கொண்டால்,
கரையேறவே ஆசை படாது மனது.
அங்கேயே சிக்கி தவிக்கும்.
மனுசனை கிறுக்காக்கும்.
பையன பாடா படுத்தும்.
ஆனால் எல்லாவற்றையும் விட அவள் மேல்
இப்படி கிரங்கி நிற்பதற்கு மிக முக்கிய காரணம்.
இது தான்…
அதன் காரணி… இதுவே தான்…
தாய்ப்பால் தான்.
அங்கே இருந்து தான் ஆரம்பிச்சிது
அவள் மேல் உள்ள தேடல்…
நம்ம முதல் உணவே அவளின் ரத்தம் தானே?
அவளின் உதிரத்தால் தானே நம் உயிர்?
அது தான் காரணி. வேற ஒன்னும் இல்லை.
அவள் உதிரத்தில் தோன்றி,
மார்பில் பால் குடித்து, மடியில் தவழ்ந்து….,
அவளுடனே பின்னி பிணைந்ததால் தானோ என்னவோ,
அவளைப் போலவே இருக்கும் இவளைப் பார்த்ததும்,
அதே தேடல் இவள் பின்னாலும்
அவனை தூக்கி செல்கிறது.
மீண்டும் அதே மடியில்
ஒரு அரவணைப்பும்,
அவள் நெஞ்சுக்குழியில்
தலை சாய்க்க ஒரு இடமும் வேண்டும்
அவனுக்கு. அந்த தேடல் தான்,
தொரத்தி தொரத்தி நிற்க வைக்குது,
கிரங்க வைக்குது, மயங்க வைக்குது….
மனுசனை கொஞ்ச பாடா படுத்துது?
வளர்ந்துட்டடானு சொல்லி நாலு அடி
தள்ளியே வச்சி பார்க்குது உலகம்.
ஆனால் அவன் என்றும் வளர்வதே இல்லை.
இப்பவும் அவனுக்கு அந்த அரவணைப்பு வேணும்.
இனி அம்மாவிடம் போய் நிற்க முடியாது.
அப்ப யாரிடம்…..