
பெண்ணை அடித்து கொலை மிரட்டல், கணவன் மாமியார் மீது வழக்கு..!!
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாடக்காப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் (50). இவரின் மகள் மதுபாலாவை கம்பத்தான் பாறையைச் சேர்ந்த நந்தகுமாருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. நந்தகுமார் அடிக்கடி குடிக்கு அடிமையாகி மதுபாலாவை துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த 23ஆம் தேதி நந்தகுமார், அவரது தாயார் வெள்ளையம்மாள் ஆகிய இருவரும் மதுபாலாவை திட்டி தாக்கியுள்ளனர். இதில் மதுபாலா திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்துள்ளார். இதுகுறித்து தங்கவேல் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.