தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பெண்கள் பாலியல் பலாத்காரம் பண்ணப்படுகிறார்கள். இது குறித்து அரசு மற்றும் காவல் துறையினர் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி கொண்டு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது நாம் அனைவரும் செல்வது காவல்துறையிடம் தான் ஆனால் அந்த காவல்துறையே பெண்களை இவ்வளவு மோசமாக நடத்துவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மயிலாடுதுறை அருகே காவலர் குடியிருப்பில் 16 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கொடுத்து காவலர் திருநாவுக்கரசர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து குழந்தைகள் உதவி எண் 1098ல் அந்தச் சிறுமி தனக்கு நடந்த கொடூரமான செயல் குறித்து புகார் அளித்துள்ள நிலையில், பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவல்லி அவர்கள் விசாரணை மேற்கொண்டார். இதனை அடுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட காவலர் திருநாவுக்கரசு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.