பெரும் சோகம்..!! மாரடைப்பால் உயிரிழந்த 10 வயது சிறுவன்..!!
சமீபகாலமாக இளம் வயது மாரடைப்புகள் அதிகரித்து வருகிறது. வயது வித்தியாசமின்றி ஏற்படும் மாரடைப்பு மரணங்கள் கவலை அளிப்பதாக இருக்கின்றன. சமீபத்தில் தெலுங்கானாவில் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவர் அக்ஷித்(10) மாரடைப்பால் உயிரிழந்தார். நெஞ்சுவலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் கூற, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு CPR சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மாரடைப்பால் சிறுவன் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.