
ஆந்திரா: புடி மடகா மீனவர் கிராமத்தை சேர்ந்த யர்ரையா (26) தனது சகோதரனுடன் கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மீன்பிடி வலையில் 100 கிலோ எடை கொண்ட கொம்முக்கோணம் மீன் சிக்கியது. வலையில் சிக்கிய மீனை யர்ரையாவால் இழுக்க முடியவில்லை. அப்போது மீன் யர்ரையாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. தங்கள் கண்ணெதிரே சகோதரரை மீன் கடலுக்குள் இழுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் அவர் மூழ்கி இறந்தார்.