நம் அனைவருக்கும் பொங்கல் என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் அதை எப்போதும் ஒரே மாதிரி தான் சாப்பிட்டு இருக்கிறோம். இன்று பொங்கலை வித்தியாசமாக சேமியாவில் எப்படி செய்வது என்று தெளிவாக இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள் :
சேமியா – இரண்டு கப்
பாசிப்பருப்பு -அரை கப்
நெய் – மூன்று தேக்கரண்டி
மஞ்சள் – கால் தேக்கரண்டி
தண்ணீர் – 6 கப்
உப்பு – தேவைக்கு ஏற்ப
முந்திரி – 20
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – இரண்டு தேக்கரண்டி
ஏலக்காய், லவங்கம், பட்டை – தேவைக்கேற்ப
தனியா – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
செய்முறை :
முதலில் சேமியாவுடன் பாசிப்பருப்பை வெறும் கடாயில் தனித்தனியாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும். அதன்பின் காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை லேசாக வறுத்தெடுக்கவும். இதை பொடியாக்கி கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடான பிறகு மற்ற மசாலா பொருட்களை சேர்த்து முந்திரி சேர்த்து கிளறி விடவும். இதில் வேக வைத்த சேமியாவும் சிறிது உப்பையும் பொடியாக்கிய மசாலாவையும் சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக தாளித்த பொருட்களை சேமியாவில் சட்னியுடன் பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான சேமியா பொங்கல் தயார்.




