
குப்பம் அருகே மகன் மாயம். தந்தை காவல் நிலையத்தில் புகார்.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் 17 வயது சிறுவன்.
இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் ஜூலை 30-ம் தேதி காலை 8: 30- மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுவன் வீடு திரும்பவில்லை.
சிறுவன் வழக்கமாக செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், அவனது நண்பர்களிடம் விசாரித்து பார்த்தும், உறவினர் வீட்டில் தேடிப் பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்க பெறாததால், இது குறித்து சிறுவனின் தந்தை செல்வராஜ் தனது மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்டு, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்
க. பரமத்தி காவல்துறையினர்.