
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பயங்கர தீ விபத்து..!! 11 பேர் பலி..!!
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சைனாடவுன் மாவட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பழமையான ஐந்து மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கீழ் தளத்தில் உள்ள கடையில் ஏற்பட்ட தீ மளமளவென மேல் தளத்திற்கும் பரவியது. இந்த சம்பவத்தில் 11க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.